ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-0958-61-0.
1984களில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட இந்நாடகம், முதலில் 1985இல் யாழ்.பரி.யோவான் கல்லூரியில் கல்லூரித் தமிழ் மன்றத்தின் வருடாந்தத் தமிழ் விழாவையொட்டி க.சிதம்பரநாதனின் நெறியாழ்கையில் மேடையேற்றப்பட்டது. 27.03.2024இல் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களால் மேடையேற்றப்பட்ட வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மூலப்பிரதி இரவலாகப் பெற்றுச்சென்ற ஒருவரால் மீளக் கையளிக்கப்படவில்லை. அதனை இன்னொருவரது கையெழுத்தில் பிரதி செய்யப்பட்ட ஓர் எழுத்துருவும், தட்டச்சு செய்யப்பட்ட வேறு சில எழுத்துருக்களும் கிடைத்த நிலையில், நா.நவராஜ் அவர்களால் பெறப்பட்ட இவ்வாறான பல்வேறு பிரதிகளுடன் ஒப்பிட்டு பிரதிகளுக்கிடையேயான மாறுபாடுகளை கண்டறிந்து மூல ஆசிரியரின் ஆலோசனையுடன் இந்நூலிலுள்ள நாடக எழுத்துரு மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இம்மாறுபாடுகள் பற்றிய குறிப்புகளை இந்நாடகத்தின் பின்னிணைப்பாக ‘குறிப்புகள்’ என்ற பகுதியில் பதிப்பாசிரியர் 116 குறிப்புகளின் மூலம் பதிவுசெய்துள்ளார்;. நூலின் இறுதியில் ‘அது ஒரு தொடர்ச்சியான பயணம்: குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கின் பல்துறை ஆளுமை’ என்ற தலைப்பில் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் நேர்காணல் ஒன்று கட்டுரை வடிவில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 339ஆவது நூலாக வெளிவந்துள்ளது.