17616 அமீன் அருங்காவியம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர் 5: உமர் நெய்னார் புலவர் கழகம், மட்டக்களப்பு வீதி, பெரியபாலம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (திருக்கோணமலை: யு.சு.வு. பதிப்பகம்).

107 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-38066-0-4.

ஆசிரியரின் நூல்வரிசையில் ‘அமைதிப் பூக்கள்’ என்ற கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து  22அவது நூலாகவும், அவரது காவிய நூல் வரிசையில் ஏழாவது காவியமாகவும் இந்நூல் அமைகின்றது. ஏற்கெனவே நாயகக் காவியம், அஷ்ரப் அமர காவியம், வாப்பு மரைக்கார் வழிக் காவியம், ஊர் துறந்த காவியம், தங்கத்துரைக் காவியம், மஜீது மகாகாவியம் ஆகிய காவியங்களைத் தொடர்ந்து அமீர் அருங்காவியம் உருவாக்கப்பட்டுள்ளது. என்.எம்.அமீனின் பிறப்பும் ஊரும் வரலாறுமாக அவரது அடிப்படைகளை எடுத்துரைத்து, அமீனின் அரும் சேவைகளைப் பல்வேறு பாவடிவங்களில் பதிவுசெய்வதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இறைஞ்சல், காப்பு, அவையடக்கம், நாடுநகர் வாழ்த்து, காவியம் என 106 பாடல்களும், ‘அமீனருங் குறள்’ என்று ஈரடியில் அமைந்த 28 குறட்பாக்களும், அறுசீர் கழில் நெடிலடியில் அமைந்த ‘என்.எம்.அமீன் வாழ்த்துப்பா’ 15உம், ‘அமீனரும் வெண்பா’ என 30 வெண்பாக்களிலும் இந்நூல் அமைகின்றது. களனிப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான என்.எம்.அமீன், 1976இல் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமணி’ பத்திரிகையில் ஆசிரியர் பீடத்திலிருந்து தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தார். 24 வருடங்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் பாராளுமன்ற அறிக்கையிடுபவராகவும் கடமையாற்றினார். ‘தினகரன்’ மற்றும் ‘தினகரன் வாரமஞ்சரி”யில் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றினார். பின்னர் ‘நவமணி’ பத்திரிகையில் பிரதான ஆசிரியராகவும் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். 1995இல் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கென ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமொன்றையும் உருவாக்கினார். அதில் அவர் தலைவராகவும் பணியாற்றியிருந்தார். பல்வேறு தேசிய சர்வதேச ஊடக அமைப்புக்களை அங்கத்தவராக இருந்து இவர் ஊடகத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நல்கியுள்ளார். தெற்காசிய ஊடக சுதந்திரம் (SAFMA)வில் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் 22 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் கற்கைநெறிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், Sri Lanka College of Journalism, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றிலும் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122186).

ஏனைய பதிவுகள்

Seven Seven Pots And Pearls

Uma vez que acrescer tecnologia acometida criancice hoje, ali abrasado fé de https://vogueplay.com/br/jokers-jewels-pragmaticplay/ acontecer arruíi herói gemi infantilidade poker. Esses sistemas maduro projetados para ajudá-lo