17627 அமீலா.

ப.தெய்வீகன். சென்னை 51: தமிழினி வெளியீடு, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: மணி ஓப்செட்).

132 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-87642-88-6.

ப. தெய்வீகன் தான் அறிந்த சம்பவங்களைப் பகிடியாக எழுதும் வல்லமை பெற்ற கதைசொல்லி. அப்பகிடிகளின் பின்னே காத்திரமான சிந்தனைகளைச் செலுத்தத் தெரிந்தவர். அமீலா, தாமரைக்குள ஞாபகங்கள் ஆகிய இரண்டு நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவர், ஈழத்தைப் பூர்வமாகக் கொண்டவர். உரு, அமீலா, அடுத்த கட்டப் போராட்டம், சயனைட், வெள்ளை விழிகள், சுவை, முயல்கள், என் பேரன் ஆம்பள,  இருள் பறவை ஆகிய ஒன்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘வெள்ளை விழிகள்’ என்ற கதையில் மூன்று நான்கு காட்சிப் படிமங்களை வைத்துக்கொண்டு முழுவாழ்வையுமே படம்பிடித்திருக்கிறார். இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அகதியாகவும் வேலை நிமித்தமும் வாழ்பவர்களின் மனோநிலையைத் துல்லியமாக அவரால் அக்கதையில் சொல்லமுடிகிறது. தலைப்புக் கதையாக அமைந்த ‘அமீலா’ தலைப்புக் கதை ஆப்பிரிக்கப் பெண்மீது ‘லங்கா’விற்கு ஏற்படும் காதலைச் சொல்லும் கதையாகின்றது. அக்கதையில் ஆப்பிரிக்க மக்களிடம் இருந்துவரும் ஒரு விநோத வழக்கத்தைப் பற்றியும் தெரிவித்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்