17630 அலை பாடும் துயரோசை.

பிரபா அன்பு. யாழ்ப்பாணம்: கோபால் வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxi, 177 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-99321-0-4.

இலங்கையில் தமிழ் மண்ணில் யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்களையும் அதற்குப் பிற்பட்ட காலங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களையுமே இச்சிறுகதை நூலில் காணமுடிகின்றது. உயிருக்குள் உறைந்த வலி, சாந்தி, இரணமாகிப் போன காயங்கள், அண்ணனின் வரவிற்காய், துவாரகாவின் இறுதி ஆசை, மதுவந்தி, சிறைச்சாலை, களத்தில் மலர்ந்த என் காதல், பாசப் பறவைகள், செஞ்சோலை மலர், தடுப்பு முகாமில் அவளைக் கண்டேன், வார்த்தைகள் வலிக்கிறது, வட்டுவாகலில் தொலைந்த உறவு, உமிக் குவியலில் தேடிய முத்து, பேராண்மை படமும் கட்டை அக்காவும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13317 உண்மைகள் பிடிவாதமானவை (கட்டுரைத் தொகுப்பு).

சண் தவராஜா (புனைபெயர்: பூமி புத்திரன்). ஜேர்மனி: அகரம் வெளியீடு, 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம்). 212 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4036-06-2. இந்நூலில்

15211 இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தொன்பதாவது தேசிய மாநாடு: ஸ்தாபன அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2010. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை). 74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ. 2010 ஓகஸ்ட்;