17631 அவர்களுக்கு உறக்கமில்லை.

கி.பவானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

152 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-89-4.

இந்நூலில் கி.பவானந்தனின் துரோகி, சகடவோட்டம், பச்சைக் கூப்பன், நாளையும் அடுப்பு எரியும், அவர்களுக்கு உறக்கம் இல்லை, சாடிகள் கவிழ்கின்றன, எத்தனை சோதனை?, அந்தக் குறைக்காகவா?, வாழ்வளித்து, இது புதியதல்ல, மனக்கோலங்கள், தங்கம், விளக்கு, சொந்தம், சமுதாயத்தின் வாயிலில், இதயம் அழுகிறது, உணர்வுகள், மேடுகள் பள்ளங்களைச் சந்திக்கும் போது, நேற்று-இன்று-நாளை ஆகிய 19 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கி.பவானந்தன் 12.12.1947இல் வடமராட்சி-துன்னாலையில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பத்துறையில் மேற்படிப்பை மேற்கொண்டார்.  தட்டச்சாளராகவும், எழுதுவினைஞராகவும், மேலதிக மாவட்டப் பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றபின் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 370ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72281).

ஏனைய பதிவுகள்