17803 இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்னும் கையறு நிலை.

அ.ராமசாமி (மூலம்), வி.மைக்கல் கொலின் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

26.12.2019 அன்று நிகழ்த்தப்பட்ட ஆறாவது அனாமிகா நினைவுப் பேருரையின் எழுத்துவடிவம். இன்றைய தமிழ் கலை இலக்கிய தளத்தில் தீவிரமாக எழுத்தும் வாழ்வுமாய் பயணிக்கும் கலை இலக்கிய சிந்தனையாளர் அ.ராமசாமி. பழந்தமிழ் இலக்கியம் முதல் பின்னைய நவீன இலக்கியம் வரை ஆழ்ந்த தேடலும் அவை பற்றியதான அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்ட சிந்தனைத் தளத்தில் பயணிப்பவர். குறிப்பாக ஈழ இலக்கியம் பற்றி நன்கு அறிந்தவர். அண்மைக்கால நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என தனது விமர்சனப் பார்வைக்குள் அவற்றைச் சிறைப்பிடித்தவர்.

ஏனைய பதிவுகள்

17482 ஜீவநதி: ஆனி 2023: வெற்றிச்செல்வி சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 32