வ.சிவஜோதி (மூலம்), ஹம்சகௌரி சிவஜோதி (தொகுப்பாசிரியர்). லண்டன்: தேசம் பதிப்பகம், 225, Fullwell Avenue Clayhall, Illford IG5 0RB, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (லண்டன்: Jemfar Industries PVT Limited).
ix, 104 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
கிளிநொச்சி ‘லிட்டில் எய்ட்’ சமூக சேவை அமைப்பின் இயக்குநரான அமரர் வைத்தீஸ்வரன் சிவஜோதி (18.11.1971-30.12.2020) தான் வாழ்ந்த 49 ஆண்டு குறுகிய காலத்தில் மேற்கொண்ட நேர்காணல்கள் பத்திரிகைக் கட்டுரைகள் என்பவற்றை அவரது துணைவியார் தேடித் தொகுத்துத் தனியொரு நூலாக வெளியிட்டுள்ளார். நாராய் நாராய் நாடகப் பயணம், அரங்கப் பண்பாட்டின் முக்கியத்துவம், மேடை நாடகமும் பயிற்சிப் பட்டறையும், நாடக அனுபவங்களுடன் நடிகர் பிரான்ஸிஸ் ஜெனம், இலங்கை இசை வரலாற்றில் தடம் பதித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜா, கு.சின்னப்ப பாரதி விருதுகளுக்கு அப்பால், திரை விமர்சனம்: ‘இரமதியம’ சிங்களத் திரைப்படம், நூலாய்வு: சாடிகள் கேட்கும் விருட்சங்கள், நூலாய்வு செந்நீரும் கண்ணீரும், நூலாய்வு இழப்புக்கள் இனியும் தொடர வேண்டுமா?, பெண்ணியா, வெளியுலகத்துடனான தொடர்பின்மையே யாழ் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, செம்மொழி மாநாட்டில் கிடைத்ததை விட வேறு கௌரவம் எனக்குத் தேவையில்லை, தமிழரின் சிறப்பை உலகெங்கும் பரப்புவதற்கு பாலமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி, மூன்று தசாப்த இடைவெளியை இரண்டு வருட வரவு செலவுத் திட்டத்தால் நிரப்பிவிட முடியாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுடனான நேர்காணல், வித்துவான் பொன் முத்துக்குமாரன்-பீ.ஓ.எல்: தாத்தா ஆகிய தலைப்புகளில் சிவஜோதியின் ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.