மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xxv, 26-135 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30- 4591-1. ஹேமச்சந்திர பத்திரனவின் முன்னுரையுடனும், நூலாசிரியர் மேமன்கவியின் “மொழி வேலி கடந்த இலக்கியங்கள்: என் பார்வையில்” என்ற என்னுரையுடனும் விரியும் இந்நூலில், மொழிவேலி கடந்து மனிதர்களைக் காட்டும் “வலை”, ஒரு கதை சொல்லியின் கதை: உபாலி லீலாரத்னாவின் “விடைபெற்ற வசந்தம்”, சிட்னியின் படைப்புலகம், யதார்த்தத்தின் பதிவுகள் “கமல் பெரேராவின் கதைகள்”, பின்காலனிய மனோபாவமும் சுற்றுப்புறச் சூழலும் ரஞ்சித் தர்மகீர்த்தியின் “சங்கமம்” நாவலின் ஊடாக, பின் காலனிய ராஜாவின் கதை: டெனிசன் பெரேராவின் “மலையுச்சி மாளிகையில்”, வண. பிதா W.A.T.பீற்றரின் “டிங்கி” ஜீவகாருண்யத்தின் அலைச்சல், அனுலா டீ சில்வாவின் “நாம் நண்பர்கள்- அபி யாலுவோ” தேசத்திற்குத் தேவையான தருணம், தெனகம சிரிவர்த்தன “நண்பர்கள் (மித்துரோ)” ஆத்ம சுத்தம் எதிர்கொள்ளும் நெருக்கடி, கே.சுனில் சாந்தவின் “சுடுமணல்” பன்முக அனுபவங்கள் உலாவும் வெளி, ஜயத்திலக்க கம்மல்லவீரவின் “பொய் சொல்ல வேண்டாம்” வாழ்வியல் உண்மைகளின் ஆவணம், குணசேன விதானவின் “பாலம்” இனப்பிரச்சினைக்கான தீர்வின் வாழ்வியல் மார்க்கம் ஆகிய இலக்கியக் கட்டுரைகளை இந்நூலில் காணமுடிகின்றது.