க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-77-0.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் முதலாவதாகும். இதில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகிய ஓளவையாரின் ஒழுக்கவியல் நூல்கள் இரண்டும் இடம்பெற்றுள்ளன. ஆத்திசூடி நூற்றெட்டு அடிகளில் நூற்றெட்டுக் கருத்துக்களைக் கூறுவதாய் அமைந்துள்ளது. கொன்றைவேந்தன் தொண்ணூற்றொரு அடிகளால் ஆனது. ஆத்திசூடியைப் போலவே ஒவ்வோர் அடியிலும் ஒரு அறக்கருத்தைப் போதிக்கின்றது. ஆத்திசூடியின் அடிகள் இரு சீர்களால் ஆனவை. கொன்றைவேந்தனின் அடிகள் நான்கு சீர்களால் ஆனவை. அறக்கருத்துக்கள் மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவன. இளமையிலேயே சிறுவர்களுக்குப் போதிக்கப்படவேண்டியன என்ற வகையில் இவை அறநெறிப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.