நூல் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூண்டு வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(3), 71 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 25.5×18.5 சமீ.
1996ஆம் ஆண்டில் வெளியான தேசிய கல்வி நிறுவகத்தின் நான்காம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தைத் தழுவி சைவ சமயம் கற்கும் மாணவர்களுக்கான இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. கடவுள், சமயப் பழக்க வழக்கங்கள், சைவ வரலாற்றுக் கதைகள், சைவப் பண்டிகைகளும் விழாக்களும், ஆலய அமைப்பும் தொண்டுகளும், கோயில் வழிபாட்டு முறைகள், சைவ ஆசாரங்கள், தோத்திரப் பாடல்கள், அறக்கருத்துக்கள், சமூக விழுமியங்கள் ஆகிய பத்துப் பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40436).