கனகசபை கதிர்காமநாதன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
x, 278 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: இந்திய ரூபா 250.00, அளவு: 21×14 சமீ.
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் ஒரு மருத்துவராவார். தனது திருத்தல யாத்திரைகளின்போது தரிசித்த கோவில்கள் பற்றிய தன் ஆன்மீக அனுபவங்களை இந்நூலில் 50 கட்டுரைகளின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கின்றார். யாழ்ப்பாணத்தவர் பரிபாலிக்கும் வேதாரண்யம், சிதம்பரம், குருஷேத்திரம், சித்திரகூடம், நைமிசாரண்யம், காசியில் கைகொடுக்கும் தமிழர் கோயில், காசியில் சிவராத்திரி, கயா, புத்தகயா, ஆதிசங்கரர், உபநயனம், குருவாயூரப்பன், சபரிமலை ஐயப்பன், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில், சோற்றாணிக்கரை பகவதி அம்பாள் கோயில், அவந்திகா, துவாரகா, காஞ்சிபுரம், மாயா-ஹரித்துவாரம், அயோத்தி, மதுரா, காசி, கங்கோத்திரி, பசுபதிநாதர் கோயில், கேதாரம், பத்ரிநாராயணன் கோயில், யமுனோத்திரி, திருவொற்றியூர், வடிவுடை அம்பாள் கோயில், பட்டினத்து அடிகள் கோயில், மாணிக்கவாசகர் ஆவடையார் கோயில், திருமுருக கிருபானந்த வாரியார் கோவில், மும்பை சித்தி விநாயகர் கோயில், மும்பாதேவி கோயில், திரியம்பகம், எல்லோரா குகைக்கோயில், பீமசங்கரன் கோயில், குங்குமனேசுவரர் கோயில், வைத்தியநாதம் கோயில், ஜோதிலிங்கங்கள், இராமேஸ்வரம், பத்துமலை (கோலாலம்பூர்), இறைவன் இருக்கிறார், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், சைவமும் யோகாசனமும், பெரியபுராணமும் சைவவாழ்வும், வேத ஆகம ஆலய வழிபாடு, மோதிர விரலிலே தருப்பை போடுவதேன், சிவனை கோயில்களில் பரிவார மூர்த்தியாக வைப்பது சரியா?, நுணாவில் வைரவரின் பெருமை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63706).