13136 ஈழத்து சக்தியின் அற்புதங்கள்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஜுன் 2009. (யாழ்ப்பாணம்: சண்சைன் கிரப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்).

xiv, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

ஈழத்தில் சக்தி வழிபாடு இடம்பெறும் கோவில்கள் பற்றியும் அவற்றில் காணப்பெறும் அம்பாளின் அற்புதங்கள் பற்றியும் இந்நூல் பேசுகின்றது. இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலம், இணுவில் கோண்டாவில் காரைக்கால் மாரி அம்மன் திருத்தலம், நயினை நாகபூஷணி அம்பாள் திருத்தலம், தெல்லிப்பழை துர்க்காதேவி திருத்தலம், சுன்னாகம் வாரியப்புலம் மகாமாரி திருத்தலம், சீரணி நாகபூஷணி அம்பாள் திருத்தலம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் திருத்தலம், நவாலி களையோடை அம்பாள் திருத்தலம், சங்கரத்தை பிட்டையம்பதி பத்திரகாளி அம்பாள் திருத்தலம், வண்ணை நாச்சிமார் கோவில், வண்ணைநகர் வீரமாகாளி அம்பாள் திருத்தலம், உரும்பிராய் பர்வதவர்த்தினி அம்பாள் திருத்தலம், இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் திருத்தலம், மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகி அம்பாள் திருத்தலம், சிட்டிவேரம் (சுட்டிபுரம்) அம்மன்; திருத்தலம், வல்வெட்டித்துறை முத்துமாரி அம்பாள் திருத்தலம், வதிரி உல்லியனொல்லை கண்ணகி அம்பாள் திருத்தலம், வற்றாப்பளை கண்ணகி அம்பாள் திருத்தலம், திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் திருத்தலம், மட்டுநகர் துறைநீலாவணை கண்ணகி அம்பாள் திருத்தலம், மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம் ஆகிய 21 கோவில்கள் பற்றிய தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47541).

ஏனைய பதிவுகள்

16281 நொண்டி நாடகம் : தென்மோடிக் கூத்து.

யோ.யோண்சன் ராஜ்குமார் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை