13139 தம்பிலுவில் கண்ணகி வழிபாடு.

நா.நவநாயகமூர்த்தி. அக்கரைப்பற்று: வானதி வெளியீடு, வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, 1வது பதிப்பு, மே 1999. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செற் அச்சகம்).

100 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21×14.5 சமீ.

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்தில், தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கென இலங்கையில் அமைந்துள்ள ஆலயங்களுள் முக்கியமானதாக தம்பிலுவில் ஆலயம் குறிப்பிடப்படுகின்றது. ஈழத்தின் பழைமைவாய்ந்த கண்ணகி ஆலயங்களில் ஒன்றாகவும் இது கணிக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் பின்னணியில் தம்பிலுவில் பிரதேசத்தில் வழக்கிலுள்ள கண்ணகி வழிபாடுபற்றி இந்நூல் பேசுகின்றது. தம்பிலுவில் கிராமம் ஓர் அறிமுகம், தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, கொம்பு விளையாட்டு, அம்மன் அருளால் மழைபொழியச் செய்த கண்ணப்பர், கண்ணகி வழிபாட்டில் கலை இலக்கியம், வரலாற்றுப் பின்னணி, தம்பிலுவில் கண்ணகி வழிபாடு தோற்றம் ஆகிய கட்டுரைகளுடன், தம்பிலுவில் மழைக் காவியம், கண்ணகி அம்மன் பள்ளு, கண்ணகை அம்மன் கும்மிப் பாடல், கண்ணகி அம்மன் வாழ்த்து ஆகிய பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வானதி வெளியீட்டுத் தொடரில் வெளிவந்த நான்காவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21199).

ஏனைய பதிவுகள்

17167 அதிசய நீரூற்று ஸம்ஸம்.

அகத்திமுறிப்பான். (இயற்பெயர்: செய்னுதீன் செய்கு பரீத்). பரகஹதெனிய: ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா. தலைமையகம், பறகஹதெனிய, Ntcl, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vii,