13178 சுப்ரமண்யம்: நோர்வூட் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2001.

மலர்க்குழு. நோர்வூட்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.

நோர்வூட், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேக நிகழ்வு 29.10.2001 அன்று நிறைவெய்தியதையொட்டி இச்சிறப்பு மலர் 15.12.2001 அன்று மண்டலாபிஷேகப் பூர்த்தி நாளில் வெளியிடப்பட்டது. இதில் ஆசியுரைகள், முருகனின் விஷேட திருத்தலங்கள், ஸ்ரீ கந்தசஷ்டி விரதம், மகா சிவராத்திரி தத்துவம், தெய்வச்சிறப்புகள், சிறப்புக்கட்டுரைகளும் கதைகளும், பஞ்சபுராணங்கள், கோயில் ஊஞ்சற் பாடல்கள் என்பவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22337).

ஏனைய பதிவுகள்