அருணகிரிநாதர் (மூலம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xxii, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-9233-62-6.
அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ்களில் கதிர்காமம், திருக்கோணமலை, நல்லூர், கந்தவனம் ஆகிய திருத்தலங்கள் மீது பாடியவற்றைத் தேர்ந்து இந்நூலில் வழங்கியிருக்கின்றனர். கதிர்காமத் திருத்தலத்தின் மீது பாடப்பெற்ற 31 பாடல்களும், திருக்கோணேசர் திருத்தலத்தின் மீது பாடப்பெற்ற இரு பாடல்களும், நல்லூர் கந்தசுவாமி, கந்தவனம் ஆகிய இரு திருத்தலங்களின்மீதும் பாடப்பெற்ற ஒவ்வொரு பாடல்களுமாக மொத்தம் 35 பாடல்கள் இந்நூலில் உரை விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.