13261 ஸ்ரீ சுப்ரமண்ய மஹோற்சவ பத்ததி.

ச.பத்மநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2001, 2வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

x, 150 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-955-9233-70-1.

திருக்கோவில் கிரியை மரபுகளுள் மஹோற்சவக் கிரியைகளும் ஒன்று. மஹோற்சவக் கிரியைகளின் நெறிமுறைகளைக் கூறுவன மஹோற்சவ பத்ததிகளாகும். அவ்வகையில் சுப்ரமண்யமூர்த்தியை மூலவராகக்கொண்டு விளங்கும் திருக்கோவில்களில் நடைபெறும் மஹோற்சவக் கிரியை நெறிமுறைகளைக் கூறும் நூல் இதுவாகும். இந்நூல் மண்டைதீவை வதிவிடமாகக் கொண்ட சிவஸ்ரீ இ.ஞானசேகரக் குருக்கள் அவர்களது கையெழுத்துப் பிரதியை அடியொற்றி பல்வேறு பத்ததிகளையும் அனுசரித்து தொகுக்கப்பட்ட பத்ததி நூலாகும். இந்நூல் முதலில் 09.05.2001 அன்று யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீவத்ச கோத்திரம் பிரம்மஸ்ரீ சுந்தரராஜ சர்மா பசுபதீஸ்வர சர்மா அவர்களது முதலாவது வர்ஷாப்திக நினைவாக வெளியிடப்பட்டிருந்தது. மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தினரின் அனுசரணையுடன் கொழும்பில் 2018இல் நடந்தேறிய நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டின் நினைவாக மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்