13262 ஸ்தோத்திரக் களஞ்சியம்.

மலர்க் குழு. கொழும்பு: T.S.கணேந்திரன் அவர்களின் நினைவுமலர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை).

98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

T.S.கணேந்திரன் (15.3.1931-18.4.1992) அவர்களின் நினைவுமலராக வெளிவந்துள்ள இந்நூலில் விநாயகர் (திருமுறைகள், விநாயகர் கவசம், விநாயகர் திருவகவல், அர்ச்சனை மாலை, நாமாவளி), குரு (குரு ஸ்துதி, எங்கள் குருநாதன், நாமாவளி), கிருஷ்ணர் (ராதையின் பிரார்த்தனை, திருமால் வழிபாடு, ஸ்ரீகிருஷ்ண கவசம், சற்குரு பாதுகை, நாமாவளி, மங்களம்), சிவன் (சிவபுராணம், திருநூற்றுப் பதிகம், திருக்கூற்றுப் பதிகம், கோளறு திருப்பதிகம், நற்சிந்தனைப் பாடல்கள், ஸ்ரீ மஹாமிருதயுஞ்ஜய தோத்திரம், ஸ்ரீ மஹாமிருதயுஞ்ஜய மந்திரம்), சக்தி (சக்தி கவசம், ரோக நிவாரண அஷ்டகம், ஸ்ரீ புவனேஸ்வரி மாலை, ஸ்ரீதுர்க்கா அஷ்டகம், தக்க நிவாரண அஷ்டகம், அபிராமி அந்தாதி, பக்திப் பாடல்கள்), முருகன் (சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருப்புகழ், நாமாவளி), ஆகியோருக்கான பக்திப் பாடல்களும், பஜகோவிந்தம், நற்சிந்தனை, தெய்வீக சிந்தனை ஆகிய அருள்விருந்தும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34600).

ஏனைய பதிவுகள்

14184 ஈசுபரன் அகவலும கந்தசுவாமி காவியமும்.

சி.கணபதிப்பிள்ளை. நிந்தவூர்: சி.கணபதிப்பிள்ளை, இளைப்பாறிய தலைமை ஆசிரியர், அட்டப்பளம், 1வது பதிப்பு, நவம்பர் 1977. (கல்முனை: ஆனந்தா அச்சகம், 87, பிரதான வீதி). (8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×12.5 சமீ. இந்நூலில்