13265 பஹாய் ஆவது எப்படி?

இந்திய பஹாய் தேசிய ஆன்மீக சபை (மூலம்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்). புதுடில்லி: பஹாய் பப்ளிஷிங் ட்ரஸ்ட், தபால் பெட்டி எண் 19, 1வது பதிப்பு, நவம்பர் 1977. (சென்னை 600017: Balmursuns Printers, பாண்டி பசார்).

96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

இந்திய பஹாய் தேசிய ஆன்மீக சபை தொகுத்துள்ள இந்நூல், பஹாய் அங்கத்தவராக இருப்பவருக்குரிய அடிப்படைப் பொறுப்புகளும் விசேட சலுகைகளும் பற்றிப் போதிய தகவல்களை வழங்குகின்றது. பஹாய் என்பது இறைவனின் ஓளி எனப் பொருள்படும். பஹாய் மதம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பஹாவுல்லா அவர்களினால் தொடங்கப்பட்ட சமயமாகும். உலகடங்கிலும் 200க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைதூதர் வழியில் தானும் ஒருவர் என பஹாவுல்லா தன்னைக் குறிப்பிடுகிறார். இந்நூலில்  ஷோகி எபெண்டி என்பவர் எழுதிய பஹாய் ஆவது எப்படி?, ஷோகி எபெண்டி  எழுதிய மறைமொழிகள்: பஹாவுல்லா, பஹாவுல்லா எழுதிய பஹாய் பிரார்த்தனைகள் ஆகிய மூன்று நூல்களுக்கான தமிழாக்கம் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25150).

ஏனைய பதிவுகள்