தேவகௌரி, சூரியகுமாரி (இதழாசிரியர்கள்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2000. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்;).
53 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில் பாலியல் உணர்வு பாலியல் ஒழுக்கம் பாலியல் கல்வி (அ.பவானி), பெண்ணியம் சில கேள்விகள் (ஆறாம் திணை), ஆண்மையக் கருத்துக்களிற்கெதிரான ‘களைதல்’ (ஆகர்ஷியா), பெரும்போக்கு வாதங்களின் போதாமைகளும் ஒரு சாராரின் மறுப்புக்களும் (செல்வி திருச்சந்திரன்), விஸ்வ ரூபம் – கவிதை (மண்டூர் அருணா), ஆண்களும் பெண்களும் இரு வேறுபட்ட வரையறைகளா? (நரதாயினி), ஆதலினால் நாம் -சிறுகதை (சுமதி ரூபன்), நகர-கிராம சித்திரிப்புகளினூடாக பெண்களும் பால்நிலையும் (சுனிலா அபயசேகர-ஆங்கில மூலம், ஜி.ரி.கேதாரநாதன்-தமிழாக்கம்), பெண் பிரஜை (சுனிலா அபயசேகர-ஆங்கில மூலம், அ.ரஜீவன் தமிழாக்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001104).