13308 சாதி தேசம் பண்பாடு.

ந.இரவீந்திரன். கோவை 5: முகம் வெளியீடு, 20/37, 13ஆவது தெரு, ஐயர் மனைப் பிரிவு, சிங்காநல்லூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

256 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

தேசியம், தேசம் உருவக்கத்தில் சாதிய ஆதிக்கப் பண்பாடு கடும் இடையூறுகளையும் எதிரீடுகளையும் உண்டுபண்ணி நம்மை வலுவற்றவர்களாக ஆக்கியுள்ளதை முன்னெப்போதும் இல்லாத வகையில் உணர்கின்றோம். தேசிய சிந்தனை, செயல்பாட்டு உருவாக்கத்தில் உள்ள ஆதிக்க சாதியக் கூறுகளைக் கண்டறிந்து களைவது நம் முன்னுள்ள முக்கிய பணி. இப்பணியை இலங்கை இடதுசாரி இயக்கத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வரும் இரவீந்திரன் இந்நூலில் முன்னெடுத்துச் செல்கின்றார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் உள்ள காலையடிக் கிராமத்தில் 1955இல் பிறந்தவர் இரவிந்திரன். சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியான இவர் அங்கு தன் முதுகலைமானிப் பட்டத்தினையும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் நெறிப்படுத்துகையில் ‘திருக்குறளின்; கல்விச் சிந்தனைகள்” என்ற பொருளில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்திசெய்தவர். மலையகத்தில் 1977இல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1992இல் மலையகத்தின் ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரானவர். தொடர்ந்து 1995இல் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இடம்மாற்றம் பெற்று அங்கு 2008வரை பணியாற்றியவர். பின்னர் தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியில் இணைந்து அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். இவர் இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய பங்காளராவார்.

ஏனைய பதிவுகள்

13177 சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கம் வெள்ளிவிழா மலர் 1968-1993.

எம்.ஆர். ராஜ்மோகன் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இந்து ஊழியர் சங்கம், சுங்கத் திணைக்களம், 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: சிட்டிசன் பிரின்டர்ஸ், 88 ஜிந்துப்பிட்டி வீதி). (262) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,