14550 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர்-ஆனி 1961.

மஹாகவி, பாலேஸ்வரி, ஈழவாணன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 1961. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 10-96 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ. இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் பல்வேறு சிறந்த படைப்பாக்கங்களுடன் இந்த முதலாம் ஆண்டு மலர் வெளிவந்துள்ளது. கனக.செந்திநாதன் (படித்திருக்கிறீர்களா?-கட்டுரை), வை.சோமாஸ்கந்தர் (திருக்கோணமலை தந்த தமிழ்ச் சான்றோர்கள்-கட்டுரை), உதயணன் (நிறைவு-சிறுகதை), நவம் (அருகில் வந்தாள் உருகி நின்றாள்- சிறுகதை), பவானி (பிரார்த்தனை-சிறுகதை), ஆ.பொன்னுத்துரை (உண்மைக்கு ஒருத்தி-சிறுகதை), முருகையன் (உலாவி வாகவிதை), அ.ந.கந்தசாமி (நான் செய் நித்திலம்-கவிதை), கதிரேசன் (காட்டுவழிகவிதை), அமுது (காலன் கதை-கவிதை), நவாலியூர் சோ.நடராசன் (நவீன சூர்ப்பனகை வருகை-கவிதை), திமிலைத் துமிலன் (நாளை பிறப்பது நம்முலகுகவிதை), செ.வேலாயுதபிள்ளை (விதி ஒறுத்த மாந்தர் -கவிதை), மா.பார்வதிநாதசிவம் (அறம் கூறும் வாழ்வு-கவிதை), ஜி.எஸ்.யோசேப் (அமரனாவாய்-கவிதை), சோமலிங்கம் (வாய்க்காரி-கவிதை), அ.சண்முகதாசன் (நினைவு போதும் -கவிதை), கா.சி.ஆனந்தன் (பிறை நிலவு-கவிதை), பத்மலோசனி முத்துக்குமாரு (இலக்கிய நிதி-கவிதை), நீலாவணன் (இன்றுனக்கும் சம்பளமா? -கவிதை), தனலட்சுமி சுப்பிரமணியம் (கிளிப்பாட்டு-கவிதை), இராஜபாரதி (மூட்டைவிடு தூது-கவிதை), புரட்சிக் கமால் (நாளை வருவான் ஒரு மனிதன் -கவிதை), பரமஹம்சதாசன் (விண்ணமுதம் தருவாள் -கவிதை), அண்ணல் (சிற்றிடையை என் கரத்துள் சேர்ப்பாள் -கவிதை), ஈழவாணன் (கல்லாகிப் போ-கவிதை), மஹாகவி (கண்களும் கால்களும் -கவிதை), ரீ.பாக்கியநாயகம் (பார்த்தல் பலவிதம் -கட்டுரை), பத்மாசனி ஏரம்பு (கைகூடியது- சிறுகதை), தங்கன் (ஆசையினாலே மனம் – சிறுகதை), வி.சிங்காரவேலன் (நேர்மை- சிறுகதை), பா.பாலேஸ்வரி (தண்டனை- சிறுகதை) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலர் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43612).

ஏனைய பதிவுகள்