13362 உள்ளூராட்சி மறுசீரமைப்புப் பரிசீலனை ஆணைக்குழு அறிக்கை.

அரசாங்க வெளியீட்டு அலுவலகம். கொழும்பு 1: அரசாங்க வெளியீட்டலுவலகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).

xvii, 817 பக்கம், விலை: ரூபா 406.00, அளவு: 24.5×15 சமீ.

பருவப் பத்திர இலக்கம் 1-1999. எட்டுப் பாகங்களில் உள்ளடக்கப்பட்ட 18 அத்தியாயங்களில் அமைந்துள்ள இவ்வறிக்கையின் முதற் பாகத்தில் இலங்கையில் உள்ளூராட்சி சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பின்னணி தரப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் உள்;ராட்சி முறை, அதிகாரங்களும் அலுவல்களும், சபை விவகாரங்கள், மனித வள, பௌதிகவள முகாமைத்துவம், வருமானமும் நிதி முகாமைத்துவமும், அபிவிருத்தியும் பௌதிகத் திட்டமும், வீதி அபிவிருத்தி அலுவல்கள், பொதுசன சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, பொதுப் பயன்பாட்டுச் சேவை, சனசமூக சேவை, பொதுமக்கள் பங்கேற்பும் சமூக அபிவிருத்தியும், பொருளாதார அலுவல்கள் ஆகிய அத்தியாயங்களும், மூன்றாம் பாகத்தில் அரசியலமைப்பும் சட்டப் பணிகளும் என்ற அத்தியாயமும், நான்காம் பாகத்தில் ஒரே விதமான உள்ளூராட்சி சட்டமுறை என்ற அத்தியாயமும், ஐந்தாம் பாகத்தில் உள்ளூராட்சி தேர்தல் முறை என்ற அத்தியாயமும், ஆறாம் பாகத்தில் மத்திய நிர்வாக மேற்பார்வை என்ற அத்தியாயமும், ஏழாம் பாகத்தில் இலங்கையில் உள்ளூராட்சிக்கான புதியதொரு நோக்கு என்ற அத்தியாயமும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16160). 

ஏனைய பதிவுகள்

16500 ஏர்: கவிதைத் தொகுப்பு.

வே.புவிராஜ். யாழ்ப்பாணம்: கலை, இலக்கிய பண்பாட்டுப் பேரவை, கைதடி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, 2022. (சென்னை 600117: ஸ்ரீ துர்க்கா பிறின்டர்ஸ்). 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. “ஏர்