13385 சமுதாய மாற்றமும் பாடசாலைகளும்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 130 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-623-6.

கல்விச் செயற்பாடுகள் நிகழ்கின்ற பாடசாலைகளின் முனைப்பும், தொலைநோக்கும், செயற்பாடுகளும் சமுதாய மாற்றத்தை நோக்கியதாக அமையும்போது மாத்திரமே வளர்ச்சியுடன், சமத்துவமும், சமுதாய நீதியும் வளர்வது சாத்தியமாகின்றது.  பாடசாலைகளின் விசையும் தொழிற்பாடும் ஆசிரியர்களின் செயலாற்றுத் திறன்களில் தங்கியுள்ளது. சமுதாய மாற்றம் பாடசாலைகளினாலும், ஆசிரியர் செயலாற்றத்தின் தரத்தினாலும், நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த வகையில் சமூகநீதி நோக்கிய சமூக மாற்றங்கள் தேவை என்பதை இந்நூலிலுள்ள சமுதாய மாற்றமும் பாடசாலைகளும்/ பின்தங்கிய சமூக பெண்பிள்ளைகளின் கல்வி/ பாடசாலைகளும் தனியார் கல்வியும்/ பாடசாலைகளும் மாணவர் அனுமதியும்/ வகுப்பறைகளில் ஆசிரியர்களின் செயற்திறன்கள்/ ஆசிரியர்களின் தொடர்பாடல் திறன்கள்/ வாசித்தலும் கற்றலும்/ பாடசாலைகளும் தலைமைத்துவமும்/ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சுயமுகாமைத்துவம்/ சமுதாய விரயமும் ஆசிரியர் பற்றாக்குறையும் ஆகிய பத்து அத்தியாயங்களும் வலியுறுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

15000 சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்.

பெ.சு.மணி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 108: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, 1வது பதிப்பு, மார்ச் 2005. (சென்னை 600 021: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்). 96 பக்கம், விலை: இந்திய

14826 காற்சட்டை அணியும் பெண்மணி: சீனக் குறுநாவல்.

வாங் நுன்சி (சீன் மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: நதி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20×13.5 சமீ. நான்கு