செ.அழகரெத்தினம். திருக்கோணமலை: திருமதி சிவகாமிப்பிள்ளை அழகரெத்தினம், 65/40, பாரதி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2001. (திருக்கோணமலை: ஜோசித்ரா அச்சகம்).
xiv, 292 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97620-1-x
சுவாமி விபுலாநந்தருடைய ஆளுமையின் பல்வேறு அம்சங்களையும் தனித்தும் இணைத்தும் நோக்கி, அவற்றினூடே புலப்படும் அவ்வாளுமைச் சிறப்பினை நோக்கும் முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது, விபுலாநந்த அடிகளின் வாழ்க்கையும் கல்வி வளர்ச்சியும், கல்வித் தத்துவமும் கல்வித் தத்துவத்திலும் தொண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்திய காரணிகளும், பல்வகைக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி, போதனாமொழி பற்றிய சிந்தனைகள், கற்றல் கற்பித்தல் செயல்முறை பற்றிய கருத்துக்கள், கல்வித் தொண்டுகள், நிறைவுரை ஆகிய ஏழு இயல்களைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாவார்.