இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: இரா.ஜெயக்குமார், 68/8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
(5), 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-43965-1-7.
2016ஆம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஆசிரியர் வழிகாட்டி நூலுக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்ட இந்நூல் மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் கொண்டுள்ளது. அந்தரே கதைகள், ஆறு, கடமை, காட்டு விலங்குகளைக் காப்போம், யாம் ஐவோம், காந்தியடிகள் கடிதம், தமிழ் தட்டச்சின் கதை, செந்தமிழ் போற்றிய சேரன், சிலேடை, பென்சிலின் கதை, உயிர் காக்கப் பயிர் காப்போம், ஈசன் உவக்கும் இன்மலர்கள், கடலும் கிணறும், கருங்காற் குறிஞ்சி, படைப்பின் இரகசியம், பொய் சொல்லாதே, வீழ்ந்த ஆலமரம், பிள்ளை அழுத கண்ணீர், வெண்ணிலா, ஒழுக்கம் உடைமை, புதிய அத்திசூடி ஆகிய 21 அலகுகளாக இந்நூல் வகுக்கப்பட்டு அவற்றுக்குரிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் யா/உடுவில் மான்ஸ் த.க.பாடசாலையின் அதிபராகப் பணியாற்றுகிறார்.