எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: திரு. எஸ்.தில்லைநாதன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 6: கிரிப்ஸ்).
x, 168 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.
க.பொ.த. உயர்தரம் இரசாயனத் துணைநூல் வரிசையில் மூன்றாவது நூல். புதிய பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டுள்ளது. சேதனச் சேர்வைகளில் உள்ள பிணைப்புகள், அற்கேன்கள், அற்கீன்கள், அற்கைன்கள், அரோமற்றிக்கு ஐதரோகாபன்கள், மெதயில் பென்சீன்/தொலுயீன், அலசன் பெறுதிகள், ஒட்சிசனைக் கொண்ட காபன் சேர்வைகள், ஈதர்கள், பீனோல், காபனைல் சேர்வைகள், காபொட்சிக் அமிலங்கள், காபொட்சிக் அமிலப் பெறுதிகள், நைதரசன் சேர்வைகள் ஆகிய 14 பாடத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அனுபந்தங்களாக, சேர்வைகளை வேறுபடுத்தி அறிதல், மூலகங்களின் பண்பறி பகுப்பு, பெயரீடு ஆகியவை தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40005).