தீப்தி பெரேரா, சுவினீதா தஸநாயக்க (மூலம்), நந்ததாச கோதாகொட, தியனாத் சமரசிங்ஹ (பதிப்பாசிரியர்). கொழும்பு: யௌவனர் சுகாதார வழிநடாத்துக் குழு, இணை வெளியீடு: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).
(4), 55 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ.
வளரிளம் பருவத்தினருடன் இனப்பெருக்க சுகாதார கல்வி குறித்து இந்நூல் பேசுகிறது. இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இனப்பெருக்க சுகாதாரக் கல்வியை போதிப்பதற்கான தருணம் வந்துள்ளது எனவும் மாணவர்களுக்கான பாட விதானத்தில் இப்பாடமும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கருத்து நிலவும் ஒரு காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. இனப்பெருக்க சுகாதார கல்வி என்பது மற்றொரு வகையான பாலியல் கல்வி என்பது தவறாகும். இனப்பெருக்க சுகாதார கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளையோர்களை பாலியல் மூலம் பரவும் நோய்களிலிருந்தும் அநாவசிய கர்ப்பங்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்பதை இந்நூல் கருத்திற் கொள்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35773).