கா.பரமேஸ்வரன். சாவகச்சேரி: இ.க.சிவஞானசுந்தரம், ஆசிரியர், கல்விவள ஆலோசகர், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஆடி 2000. (யாழ்ப்பாணம்: கங்கை கொம்பியூட்டர் பிரின்ட்ஸ், பிரவுண் வீதிக்கு அருகாமையில், நாவலர் வீதி).
(6), 24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 24×17 சமீ.
தரம் 7இல் கல்வி கற்கும் மாணவர்கட்குரிய வினாக்களும் விடைகளும் கொண்ட தொகுப்பு. இந்நூலாசிரியர் சங்கீத பூஷணம் கா.பரமேஸ்வரன், விஷேட பயிற்சி பெற்ற சங்கீத ஆசிரியர். யாழ்ப்பாணம், கைதடி நாவற்குழி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31080).