மலரன்பன். கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, ஜுலை 2001. (மாத்தளை: அலங்கார் ஓப்செட் பிரிண்டிங், 405, பிரதான வீதி).
(2), 60 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 20.5×15 சமீ., ISBN: 955-9084-11-9.
மலையகத்தின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்ற கணிப்பைப் பெற்றவர் மலரன்பன். 1989இல் வெளியான இவரது ‘கோடிச்சேலை’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அரசின் உயர் இலக்கிய விருதான தேசிய சாகித்தியப் பரிசும் இலக்கிய வித்தகர் என்ற பட்டமும் பெற்றவர். குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ள ஈழத்தின் மெல்லிசைப் பாடல் துறையில் ஆழக்கால் பதித்து நிற்பவர்களுள் ஒருவராக மலரன்பனும் அறியப்படுகின்றார். இவரது படைப்பாக்கத்தில் உருவான மெல்லிசைப் பாடல்கள் பல வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களின் வழியாக மக்களை எட்டிப் பாராட்டுப் பெற்றிருந்தன. அத்தகைய மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. தலைப்புப் பாடல் மகாவலி கங்கையை வாழ்த்துவதினூடான இன ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அசோகவனம், இசையெனும் நாதம் பொழிகையிலே, மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும், மகாவலியே மாநதியே, தென்றலுக்கு வேலி இல்லையே, இலையுதிர்காலப் பறவைகளே, நம் தேசம் மடியினிலே, இயற்கை அன்னையின் மடியினிலே, உச்சி மலைச்சாரலிலே, குறிஞ்சி நிலா, சுயம்வரமோ சுபதினமோ, அம்மா உன் பூவான முகம்காணவே, கீழ்வானம் சிவந்ததம்மா, உழைக்கும் கரங்களே, இலங்கையர் நாம் இலங்கையர், போராலே உலகில், வெள்ளைப் புறாவே, எங்கே போகிறோம், அன்னை தேசமே, ஒரு மரத்துப் பறவைகளே, புத்தம்புது நெல்லறுத்து, செந்தூரப் பூவொன்று பெண்ணாகவே, பால்வண்ணக் கோலம் வரைந்த நிலா, தங்க மகளே, மஞ்சள் நிற முகிலணிந்து, ஈராயிரம் ஆண்டினிலே, வாழ்க்கை என்பது தானே, தாழம்பூவே, கடலலை போலே ஆசைகளாலே என இன்னோரன்ன தலைப்புகளில் மலரன்பனின் இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10774CC).