ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்).
70 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 20.5×15 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இவ்விதழில், இனிவரும் காலங்களில் நாம் (ஆசிரியர் குழு), அரங்க நடவடிக்கையில் புதிய பரிமாணத்தை நோக்கி தெருவெளி அரங்கு (தே.தேவானந்), மைக்கல் செக்கோவ் (இ.ஜெயரஞ்சனி), உயிரினங்களின் நிகழ்த்துக் கலையை கனவு காண்கின்றோம் (வேலு சரவணன்), யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு (யோ.யோண்சன் ராஜ்குமார்), நூல் நுகர்வு: நடிகமணி வி.வி.வைரமுத்து வாழ்வும் அரங்கும் (சந்திரன்), நூல் நுகர்வு: அன்னை இட்ட தீ (நிலவன்), பாறையும் கசிவும் சிறுவர் நாடகம் (ஞா.கெனத்), நாராய் நாராய் நாடகப் பயணம்: ஓர் அனுபவக் குறிப்பு (வைத்தீஸ்வரன் சிவஜோதி), நிகழ்வும் பதிவும் (கி.செல்மர் எமில்), விமரசனம்: ஈடிபஸ் மன்னன் (ஜீ.வதனன்), சொல்ல நினைப்பவை (ஆசிரியர் குழு) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018430).