13569 இராமன் கதை: சிறுவர் சிறுமியருக்கு எழுதிய தமிழ் வசன நூல்.

பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி (இயற்பெயர்: அழகசுந்தர தேசிகர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-7461-15-1.

ஈழத்துத் தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் மகனும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல் தமிழ் விரிவுரையாளருமான பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி (அழகசுந்தர தேசிகர்) அவர்களால் 1942இல்  வெளியிடப்பட்ட நூல் இது. இம்மீள்பதிப்பில்; வாசிப்பை இலகுவாக்கும் நோக்கில் சொற்கள் பிரிக்கப்பட்டும், கடினமான சொற்கள் மாற்றப்பட்டுமுள்ளன. பிறப்பும் இளமையும், இராமன் விசுவாமித்திரர் வேள்வி காத்தலும் சனகர் மகளை மணத்தலும், பரசுராமனை வெல்லல்-மந்திராலோசனை, மந்தரை -கைகேயி, கைகேயி தசரதர், கௌசலை இராமர், சுமித்திரை, சீதை, இராமர் , இலக்குமணர், சித்திரகூடம், அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள், வனவாசம், சூர்ப்பனகை, இராவணன், மாரீசன், சீதை இரங்கல், இராமர் இலக்குமணர், மதங்க முனிவர் ஆச்சிரமம், வாலிவதம், சுக்கிரீவ பட்டாபிஷேகம், இலங்கை, அனுமான், இராவணன் கொலு மண்டபம், போர், விபீஷணனின் பட்டாபிஷேகம், சீதா இராமர், தீயில் வீழ்தலைத் தடுத்தல், இராமர் பட்டாபிஷேகம், பின்னுரை ஆகிய 26 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் 116ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்