ஆசிரியர் விபரம் தரப்படவில்லை. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1997-74-8.
அல்யோனா, இவான் ஆகிய இரு சகேதரர்களும் பெற்றோரை இழந்து இளவயதில் அனாதையானவர்கள். வேலை தேடி நீண்ட தூரம் பயணித்த வேளையில் அதீத தாகம் காரணமாக அக்காவின் சொல்லைக் கேட்காமல் வெள்ளாட்டுக் குளம்புத் தடத்தில் தேங்கியிருந்த நீரை இவான் பருகியதால் அவன் வெள்ளாட்டுக்குட்டியாக மாறிவிடுகின்றான். தொடர்ந்து பயணித்த வேளையில் ஒரு பணக்கார வியாபாரி அல்யோனாவை விரும்பி, தன்னை மணக்கும்படி அவளிடம் கேட்க, அல்யோனாவும் சம்மதிக்கிறாள். ஆட்டுக்குட்டியான தம்பியுடன் அவள் வியாபாரியின் இல்லத்தில் வாழ்கிறாள். வியாபாரி இல்லாத ஒருவேளை அங்கே வரும் சூனியக்காரி அல்யோனாவை மயக்கி ஆற்றுக்குக் குளிக்க வரும்படி தூண்டுகிறாள். ஆற்றில் அல்யோனாவின் கழுத்தில் கல்லைக்கட்டி அவளை மூழ்கடித்துவிட்டு, அவளது உருவத்தில் சூனியக்காரி வியாபாரியின் வீட்டுக்குச் செல்கிறாள். ஆட்டுக்குட்டிக்கு மட்டுமே ஆற்றங்கரையில் நடந்தது தெரியும். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை கொல்லமுயலும் சூனியக்காரியின் திட்டம் பலிக்கவில்லை. இறுதியில் வியாபாரி உண்மையைக் கண்டறிகிறான். ஆற்றிலிருந்து அல்யோனா வியாபாரியால்; மீட்கப்படுகிறாள். சூனியக்காரி துரத்தப்படுகிறாள். இந்நூல் 076ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.