13624 ஏழு நிறப் பூ.

வலெந்தீன் கந்தாயெவ் (ரஷ்ய மூலம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24×17.5 சமீ.

சைலா என்ற பெண் பிஸ்கட் வாங்க கடைக்குப்போனவள், பிஸ்கட்டை வாங்கிக்கொண்டு தெருவில் பராக்குப் பார்த்தபடி வந்ததால் ஒரு நாய் அவளது கையிலிருந்த பிஸ்கட்டுகளை அவளறியாமலே தின்றுவிடுகிறது. கோபம்கொண்ட  சைலா அதனைத் துரத்திச் சென்றதால் இறுதியில் தான் வீடுதிரும்பும் வழியையே மறந்துவிடுகிறாள். அருகில் தோன்றிய ஒரு மந்திரக் கிழவியின் உதவியால் மந்திர சக்திகொண்ட ஏழு நிறங்களில் ஏழு இதழ்களைக்கொண்ட பூவொன்றைப் பரிசாகப் பெறுகிறாள். பூவின் சக்தியினால் ஆறு இதழ்களையும் அவதானமின்றிப் பயன்படுத்தி மந்திர சக்திகொண்ட இறுதி இதழுக்கு வந்துவிட்டாள். அவ்வேளையில் தன் தவறை உணர்ந்து, எஞ்சியுள்ள ஒரு இதழின் மூலமாவது வாழ்வில் முன்னேற வழிபார்க்கலாம் என்றெண்ணியவளுக்கு பூங்காவில் அமர்ந்திருந்த ஊனமுற்ற சிறுவனான வீராத்தின் நட்புக் கிடைக்கிறது. தனது இறுதி மந்திரசக்தியை வீராத்தின் கால்கள் குணமாக்கிடப் பயன்படுத்தி மகிழ்கிறாள். மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய சிறுவர் கதையின் தமிழாக்கம் இது. இந்நூல் 103ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை ஓவியர் வ.லோஸின் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Menstruo Abrasado Texas Holdem

Content Ranking Das Avidez Do Poker Aprenda As Regras Abrasado Poker Online An arame Contemporâneo Principais Sites Por Estado Como Jogar Poker Texas Hold’em Curso