கதிரவன் த.இன்பராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45A, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
112 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
2018 செப்டெம்பர் 6 முதல் 9 வரை களுதாவளை கலாசார மண்டபத்தில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2018க்கான ஆண்டு மலர் இது. அமைப்பினரின் பல்வேறு அறிக்கைகளுடன், நூல் அறிமுகவுரைகள், சிறப்புரைகள், ஆய்வுரைகள், ஆய்வு மதிப்பீட்டுரைகள் என்பனவற்றையும் உள்ளடக்கியதாக இவ்விழாமலர் கனதியாக வெளிவந்துள்ளது. ஆய்வுரைகளாக கலாநிதி திருமதி சாந்தி கேசவனின் ‘கண்ணகி வழக்குரையில் அம்மன் பிறந்த கதை’, திரு. பாஸ்கரன் சுமன் அவர்களின் ‘சிலப்பதிகாரம்-கண்ணகி வழக்குரை : கொலைக்களக் காதை குறித்ததொரு ஒப்பியல் நோக்கு’, திரு சு.சிவரெத்தினம் அவர்களின் ’கண்ணகி வழக்குரையில் வெடியரசனும் விளங்குதேவனும்’, கலாநிதி ஹர்மிளா ரஞ்சித் குமார் அவர்களின் ‘கண்ணகி வழக்குரையில் மாதவி அரங்கேற்றுக் காதை’ ஆகியவை இடம்பெற்றுள்ளதுடன் அவற்றுக்கான ஆய்வு மதிப்பீட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.