மலர் வெளியீட்டுக் குழு. வெல்லாவெளி: கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், போரதீவுப் பற்று, 1வது பதிப்பு, 1998. (மருதமுனை: இளம்பிறை ஓப்செட்).
(76) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
சமூகப் பிரமுகர்கள், அரச நிர்வாகிகளின் வாழ்த்துச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் தமிழ்மொழி வாழ்த்து, போரதீவுப் பற்று கலாசார கீதம் (க.நல்லரெத்தினம்), வெல்லாவெளி பற்றிய அறிமுகம் (சு.சீவரெத்தினம்), போரதீவுப்பற்று பிரதேசத்தின் வள ஆய்வு (பூ.குணரெட்ணம்), கவிதை:போரதீவுப்பற்று பிரதேச வளங்கள் (த.சேரலாதன்), போரதீவுப்பற்று பிரதேச குடிமரபும், முறைமையும், சமூகமும் (ஞா.தில்லைநாதன்), ஏக்கம் நிறைந்த விழிகள் மத்தியில் எமது நிறுவனம் வேல்ட் விஷன் (எஸ்.சி.சுதர்சன்), எம் மண்ணின் மைந்தன் புகழ் பூத்த புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை (எஸ். தில்லைநாதன்), போரதீவுப் பற்று பிரதேசத்தில் புதிய நகராக்கத்தின் அவசியம் (க.ஆறுமுகம்), சிறுகதை: ஒரு மொட்டு கருகுகின்றது (த.விவேகானந்தம்), வெற்றிலையும் நாமும் (வே.முருகமூர்த்தி), போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் நாட்டுக் கூத்துக் கலை (த.விவேகானந்தம்), நீங்காத நினைவில்.. இலக்கிய இழப்பு – அமரர். பண்டிதர் முருகேசு அவர்கள், பாராட்டுப் பெறும் கலைஞர்கள் 1998 ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23373).