கனடா: ஜீவா பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 2வது பதிப்பு, சித்திரை 1988, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (கனடா: ரிப்ளெக்ஸ் பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட் டிரைவ், மிஸிஸ்சாகா).
xvi, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 22×13.5 சமீ.
ஈழத்துப் பூராடனாரின் ஈழத்துப் போர்ப்பரணி என்ற பிரபந்த இலக்கிய நூல், திருமதி பசுபதி செல்வராசகோபால் அவர்களின் அறிமுக விளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்துப் போர்ப்பரணியென்பது இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பரணிப் பிரபந்த இலக்கணத்துடன் ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். வணக்கமும் வாழ்த்தும், கடை திறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, அசுத்த ஆவிகளின் முறைப்பாடு, ஆவி பாடியது, வரலாறு பாடியது, காளிக்குக் கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது, கூளிக்குக் காளி கூறியது, கூழ் இட்டது, சமாதானச் சதி பாடியது, தன்மானப்போர் பாடியது, வாழ்த்துப் பாடியது, ஈழத்தமிழன் வீரம் பாடியது, பாயிரம் பாடியது ஆகிய 18 அங்கங்களில் இப்போர்ப்பரணி பாடப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13265).