தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). கொழும்பு 6: இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1 நெல்சன் இடம், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).
140 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-79380-3-5.
நூலாசிரியர் ஈழத்தில் மல்லாவியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வவுனியா மாவட்டத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். போர்ச்சூழலையும், புலம்பெயர்தலின் வலிகளையும தன் படைப்பாக்கங்களில் வடிப்பதில் ஆர்வமுள்ளவர். சுமார் எழுபத்தைந்து கவிதைகளைக் கொண்டுள்ள இக்கவிதைத் தொகுதியில் மரபுவழிப் புலக்காட்சிகளோடு ஒட்டிச்செல்லாது, மாற்றுவகைக் காட்சிகளோடு உறவாடியிருக்கின்றார். ஆழ்ந்த மனச்சஞ்சலங்களை பல்வேறு நுண்வடிவங்களாக மாற்றியமைத்துத் தன் கவிதைகளில் பொதித்துத்; தருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62068).