ஜேர்மனி: திருமதி கீதராணி பரமானந்தம், Schubert Str-15, 47623, Kevelaer, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxii, 81 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட கீதா பரமானந்தம், யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். முகநூலில் நிலாமுற்றத்தில் தனது கவிதைகளைப் பகிர்ந்து, தனக்கெனவொரு வாசகர் கூட்டத்தைக் கொண்டுள்ளவர். ஜேர்மனியிலிருந்து வெளிவரும் மண் சஞ்சிகை, லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் சன்ரைஸ் லண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றிலும் நீண்டகாலம் தன் படைப்பாக்கங்களை வழங்கிவந்தவர். அவரது தேர்ந்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.