13745 உயிருதிர் காலத்தின் இசை (சிறுகதைத் தொகுப்பு).

பதுளை சேனாதிராஜா. கொழும்பு 12: பதுளை சேனாதிராஜா, மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், 152/1/5, ஹல்ஸ்றோப் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

x, 256 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-54020-1-9.

சட்டத்தரணியும் படைப்பாளியுமான பதுளை சேனாதிராஜா அவர்களின் தேர்ந்த 16 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. உயிருதிர் காலத்தின் இசை, எட்டுமணி நேரம், புதுசா ஒரு தொர, பணிய லயத்து பார்வதி, பூசாரிக் காம்புரா, அடையாள அட்டை, திரை, மாயக்கண்ணாடி, சாமி, அவன்-அவர்கள்-அது, பூமராங், 19ஆம் நூற்றாண்டின் மனிதர்கள், இரண்டாவது தீர்ப்பு, தொடுகை, வர்ணங்களால் நெய்யப்படும் இழைகள், ஆதி மரமொன்றின் வேர்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்