என்.விஜயலட்சுமி. கல்கிஸ்ஸ: திருமதி நேசசீலன் விஜயலட்சுமி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (கொகுவளை: யுனிவர்ஸ் கிராப்பிக்ஸ், 17, Field Avenue).
ix, 118 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ.
எவ்வளவுதான் பெண்ணுரிமைக்கான பட்டயங்களும் இயக்கங்களும் பெரிய அளவில் செயற்பட்டாலும் இன்றும்தான் பெண்கள் கொடுமைகளுக்குள்ளாகின்றார்கள். பருவ வயதுக் கோளாறு காரணமாகத் தவறான தெரிவுகளைச் செய்து பெரிய சங்கடங்களுக்குள்ளாகும் பெண்கள், இந்த அவலங்களுக்கிடையே முன்னுதாரணமாக அமைந்து தலைநிமிர்ந்து வாழும் பெண்கள் எனப் பல கதாபாத்திரங்களை ஆசிரியர் எமக்கு இச்சிறுகதைகளின் வாயிலாக அறிமுகப்படுத்துகின்றார். இத்தொகுப்பில் வெண்ணிலா, இரத்தம் சிவப்பு நிறம், அவன் சுமக்கும் சிலுவை, கற்பூர ஜோதி, பொய்முகங்கள், கல்யாணம் பண்ணிப்பார், தண்டிக்கப்படும் நியாயங்கள், மெழுகுவர்த்தி, ஜோதிநிலா, பிதாவே இவர்களை மன்னியும், சிவப்பு கல் தோடு, மண் குடிசை, நிஜங்களின் முகவரிகள், கண் கெட்டபின், நீல கங்கை, மாடி வீடு, குருதட்சணை, சுமைதாங்கி, உறவுகள், வேணுக்குட்டி, பூஞ்சோலை பூங்குயில், கருணை, சூரியன் நிறத்தை மாற்றிக்கொள்வதில்லை, பாலைவனச் சோலை ஆகிய 24 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63003).