13750 கொத்து ரொட்டி: சிறுகதைத் தொகுப்பு.

கோவிலூர் செல்வராஜன். லண்டன்: லக்கி மீடியா, 1வது பதிப்பு, ஜுலை 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

122 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-43552-3-1.

1970இலிருந்து எழுதிவரும் கோவிலூர் செல்வராஜனின் பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு. முன்னதாக நாவல்களையும், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு என்பனவற்றையும் விடியாத இரவுகள், ஊருக்குத் திரும்பணும் ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளையும் தந்தவர். இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. சமகால நிகழ்வுகளைத் தனது ஆக்கங்களில் பதிவுசெய்யும் கோவிலூர் செல்வராஜன், கிழக்கிலங்கையில் அண்மைக்காலமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே தனது சிறுகதைகளின் கருப்பொருள்களாக்கியிருக்கிறார். இத்தொகுப்பில், கொத்துரொட்டி, பெயர் மாற்றம்,  பாவப்பட்ட பிள்ளைகளா? இவர்கள் ஏன் இப்படி? இல்மனைட், ஒரு விதவை அஞ்சலி செலுத்துகின்றாள், முற்றத்து மல்லிகை, அருகிப்போகும் அட்டப்பள்ளம், பூங்கொடி, கடைசி மூச்சி(சு), நீயா நானா?அப்பாவின் ஆசீர்வாதம், ஒரு கிராமம் அழிந்துபோகின்றதா? புதுவெளிச்சம் ஆகிய பதினான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

No deposit Bonuses 2024

Articles Betting Internet sites Percentage Procedures | major league gaming call of duty Red coral Established Customers Offers Greatest 7 100 percent free Bets and