13819 தமிழ் தமிழ் தமிழ்.

தனபாக்கியம் குணபாலசிங்கம் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ.

ஆசிரியர் அவ்வப்போது எழுதியிருந்த தமிழியல் கட்டுரைகளும், பல்வேறு சமூகச் செயற்பாடுகள்/நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கும் பிரமுகர்களுக்கும் எழுதியனுப்பிய கடிதங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தமிழ் தமிழ்ஃ பிள்ளையார், விஷ்ணு பகவான் வழிபாடுகள் தென்னாடுகள் நோக்கிப் பயணித்த வரலாறுகள்/தமிழரசுகளை இழந்திருந்த தமிழுக்கோர்அரசினை உருவாக்க உழைத்த மாபெரும் தலைவன் பிரபாகரனை என்றென்றும் வாழ்த்தி மகிழ்வோம்/உலகத் தமிழினமே வைகாசி 18 உங்கள் துயர நாள்/ உரிமைப் போரின் வீரகாவியங்களே/முதல் இறைமொழியான தமிழைக் கற்பது இறைவனுடன் உறவாடுவதற்கே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளும், புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு) உதவி அரசாங்க அதிபர், திரு வைகோ, இந்துசேகர், கொழும்புத் தமிழ்ச்சங்கம், தீபம் தொலைக்காட்சி, காரைநகர் சுடரொளி, பிரித்தானிய தமிழர் பேரவை, ஐபீசீ தமிழ் ஆகிய அமைப்புகளுக்கும் பிரமுகர்களுக்கும் எழுதிய கடிதங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்