9914 கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தியின் இலக்கியத் தடங்கள்.

செ.யோகராசா. மட்டக்களப்பு: மட்/பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, பன்குடாவெளி, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

மட்/பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்; நினைவுப் பேருரையாக நிகழ்த்தப்பட்ட உரையின் எழுத்து வடிவம் இதுவாகும். கலாநிதி செ.யோகராசா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைத் தலைவராவார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியியலாளர்களுள் ஒருவரான கலாசூரி வெற்றிவெல் விநாயகமூர்த்தி, வெற்றிமகன் என்ற பெயரில் இலக்கிய உலகில் அறியப்பெற்றவர். சைவ நீதியும் சமய வாழ்வும், பஞ்சாமிர்தப் பாகு, மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம், விவேகானந்த தத்துவ வித்துக்கள், ஆறாம் அறிவின் சிந்தனைக் கோவை போன்ற பல நூல்களை எழுதியவர்.

ஏனைய பதிவுகள்

17038 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 30ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஆண்டறிக்கை (1971-1972).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1972. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8) பக்கம், விலை: