13882 செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பாராட்டுவிழாமலர் 1974.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: பாராட்டு விழாக்குழு, அகில இலங்கை இந்து மாமன்றம், 75, லோறன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1974. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம்).

xiv, 85 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சேவையைப் பாராட்டி 26-1-1974 சனிக்கிழமை கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில், அகில இலங்கை இந்து மாமன்ற அங்கத்துவச் சங்கங்களும் இன்னும் பல இலக்கிய, கலாசார, சமய தாபனங்களும் ஒருங்கிணைந்து எடுத்த விழாவின் போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். இதில் பதிப்புரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், பகவத் கீதையும் பெரிய புராணமும் (ச.அம்பிகைபாகன்), அத்துவித வேதாந்த சித்தாந்தம் (க.இராமச்சந்திரா), சிவ வழிபாடு (கங்கேஸ்வரி கந்தையா), அன்னை தயை (சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக் குருக்கள்), கோயிலும் சமூக வாழ்க்கையும் (க.கைலாசபதி), ஆடும் குகன் (நயினை நாக.சண்முகநாதபிள்ளை), பைத்தியங்கள் (நா.முத்தையா), பத்தியுணர்வு (ந.ரா.முருகவேள்), புறம் கூறும் அறம் (வசந்தா வைத்தியநாதன்), துன்பத்துக்குக் காரணமும் அதனை நீக்குவதற்கு வழியும் (கி.லக்ஷ்மணன்), எது இகழ்ச்சி (ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள்), துர்க்கை வழிபாட்டு மரபும் தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயமும் (தெ.து.ஜெயரத்தினம்), சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி (க.க.சுப்பிரமணியம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24473).

ஏனைய பதிவுகள்

Mega Moolah Slot Remark

Posts On which Webpages Should i Enjoy Mega Moolah Out of India? | king billy casino welcome bonus Ideas on how to Enjoy Super Moolah