13898 சைவ நீதி: அமரர் நாகலிங்கம் நித்தியானந்தன் அவர்களின் நினைவஞ்சலி மலர்.

நா.நித்தியானந்தன் குடும்பத்தினர் (தொகுப்பாசிரியர்கள்). கொக்குவில்: திருமதி மகேஸ்வரி நித்தியானந்தன், 15/9 பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019.

128 பக்கம், 16 வண்ணத் தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ.

12.08.1941இல் பிறந்து 21.08.2019அன்று மறைந்த அமரர் நா.நித்தியானந்தன் அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வின் போது வெளியிடப்பெற்ற இம்மலரில் வழமையான திருமுறைகள், இரங்கல் செய்திகளைத் தொடர்ந்து, இலங்கையில் மத்தியஸ்த சபைகள் பற்றிய அரிய தகவல்களைத் தாங்கிய கட்டுரையொன்றும், இலங்கையில் இந்துப் பாரம்பரியம் என்ற தலைப்பில் தமிழர் சமூகத்தில் பூப்புனித நீராட்டுவிழா, திருமண விழா, மரணக்கிரியைகள் என்பவற்றின்போது கடைப்பிடிக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றிய விரிவான கைந்நூலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்