13900 இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு.

தியாகி கோ.இராஜகோபால். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1975. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xx, 212 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 8.50, அளவு: 18×12.5 சமீ.

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தியாகி கோ.இராஜகோபால் (‘கோகுலம்’, உப்புவெளி) அவர்கள் காந்திய சகாப்தத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைச் சுருங்கக்கூறி அதனால் ஏற்பட்ட பொதுசன எழுச்சியையும் அதில் தன் பங்கையும் விளக்கமாக, சரளமான நடையில்  இந்நூலில் வழங்கியுள்ளார். சுயசரிதை போன்ற இந்நூலில் அவ்வப்போது ஊடகங்களில் எழுதப்பட்ட அவரது கட்டுரைகளும், அவரைப்பற்றிய கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கண்டேன் அவர் திருப்பாதம், காந்திஜி தண்டி யாத்திரை, உலக யுத்தத்தை எதிர்த்து அறப்போர், நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம், ஜப்பான் குண்டுமாரி, எனது கதர்த் திருமணம் ஆகிய அத்தியாயங்களின் வழியே சுயசரிதையாகப் பயணிக்கும் இந்நூல் தொடர்ந்து, யார் ஐந்தாம்படை?, வெளியேறுக, போய்வருக, காட்டிக்கொடுத்த தோழர்கள், பாரதியை விபுலாநந்தரில் கண்டோம், வீரப்பணி ஆற்றிய வள்ளல், யார் சத்தியாக்கிரகி? பாரத மணிக்கொடி, மாவீரர் மௌலானா அபுல்கலாம் ஆஸாத், தியாகிகள் மகாநாட்டில் ஈழத்துப் பிரதிநிதி, மட்டக்களப்பில் பாராட்டு விழா, காந்திச் சந்நியாசி நம்மைக் காக்கும் நல்ல சுதேசி, காந்தி மகாத்மா யுகசக்தியின் புதுமலர், மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, சர்வோதயம் என்பது நிர்மாணப்பணி, தியாகி இராஜகோபாலன் அவர்களின் 60ஆம் ஆண்டு நிறைவுவிழா, தமிழா தெய்வத்தை நம்பு பயப்படாதே, காந்திஜி கண்ணீர் விட்டழுத இரண்டு சம்பவங்கள், பாரதத்தின் சொத்து பாவலர் இராமலிங்கம்பிள்ளை, இலங்கையிற் பிறந்த கவிகள், காந்தி நெறியில் காமராஜர், இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகிய கட்டுரைகளையும் வழங்கி இந்திய விடுதலைப் போர் வரலாற்றின் ஒரு பக்கத்தை ஈழமைந்தனின் பார்வையில் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3172).

ஏனைய பதிவுகள்

Free Vegas Blackjack Practice Game

Content Deposit 5 play with 25 casino casino – Play 17,600+ Free Casino Games No Registration What Is The Legal Age For Playing Online Blackjack