13904 கல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்.

பூ. சுகந்தன் (மலர் ஆசிரியர்). புத்தளம்: புத்தளம் வலய தமிழ்ப் பாடசாலைகள், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (புத்தளம்: மிலொம் பிரின்டர்ஸ்).

ix, 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

புத்தளம் கல்விப் பணிமனையில் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற செய்னுல் ஆப்தீன் ஸன்ஹிர் அவர்களின் சேவைநயப்பு மலராக இச்சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துச் செய்திகளை M.A.M.M.ஜவாத் மரிக்கார், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர், புத்தளம், வீ.நடராசா, ஓய்வுநிலை அதிபர், புத்தளம் இந்துக் கல்லூரி, எம்.கமலேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர், புத்தளம் ஆகியோர் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து (பூ.சுகந்தன், பிரதி அதிபர், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு), வரலாற்றுப் பாதையில் Z.A.ஸன்ஹிர் (1.4.2019அன்று ஓய்வுபெற்றபோது மேற்கொண்ட நேர்காணல்), உள்ளத்தின் ஆழத்திலிருந்து சில துளிகள் (வே.அருணாகரன்),  Person who lives up to his name (சகோ.மடில்டா லாஸரஸ், முன்னாள் அதிபர், புனித மரியாள் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம்), நான் அறிந்த ஆசான் (க.சிவானந்தகுமார்,அதிபர், ஒற்றைப்பனை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், புத்தளம்), மாணவனாக ஆசிரியராக அதிபராக நான் காணும் ஆசான் (வீ.இராமநாதன், அதிபர், நாயக்கர்சேனை அரசினர் தமிழ் வித்தியாலயம், மாம்புரி), என்ஆசான் (ஏ.லோகேஸ்வரி, பிரதி அதிபர், ஸெய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலை, புத்தளம்), ஆளுமை மிக்க ஆசானாய் (ந.பத்மானந்தன், அதிபர், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், உடப்பு), உம்பெயர் சொல்லுமையா (பீ.ஜெனற்ராஜ், அதிபர், நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), மனதில் நீங்காத ஆசிரியரைப் பற்றி (எம்.மேர்சி, பிரதி அதிபர், தேத்தாபளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), நான் கண்ட வரலாற்றுப் பொக்கிஷம் (எஸ்.சந்திர சுபநேமி, அதிபர், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்), நான் கண்ட பணிப்பாளர் (L.J.L.அஞ்சலா, அதிபர், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்), ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக (A.P.N.நொயல், அதிபர், மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), செயல்வீரன் (F.R.H.S.தேவகுமாரி,  பிரதி அதிபர், ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, புத்தளம்), சேவைநலன் பாராட்டுக்கள் (கே.தொண்டமான், அதிபர், ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை), ஓங்கட்டும் உங்கள் சேவை (எஸ்.வசந்திலேகா, ஆசிரியை, தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), என் நினைவிலிருந்து (ஜெயராசா அமலராஜ், ஆசிரியர், பளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), நிறைவாக சில வரிகள் (பூ.சுகந்தன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slots Book

Articles Octavian Gaming slot machines games – Exactly what Icons Can be used Inside Tv Online slots games? Get the best 100 percent free Ports

15123 சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). iv, 60