13913 சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் செந்தமிழ்ப் பணி: ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு.

சிவ.சண்முகவடிவேல் (பதிப்பாசிரியர்). ஏழாலை: அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தான சபை, 1வது பதிப்பு, 2012. (ஏழாலை: ஏ.மு.து. அச்சகம், ஏழாலை மேற்கு).

(18), 186 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் பற்றிய பல்வேறு படைப்பாக்கங்களின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். இதில் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் வாழ்க்கைச் சரிதம் (ஏ.இராசரத்தினம்), சி.வை.தாமோதரம்பிள்ளைஅவர்கள் (எஸ்.வேலாயுதபிள்ளை), இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை (க.அ.இராமசாமிப் புலவர்), தாமோதரம்பிள்ளை 1822-1901 (அ.குமாரசுவாமிப் புலவர்), தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை (சி.கணபதிப்பிள்ளை), சி.வை.தா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் (ப.தாமரைக்கண்ணன்), தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை (ப.தாமரைக்கண்ணன்), சி.வை.தாமோதரம்பிள்ளை (நா.முத்தையா), சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் கல்விப்பணி (மனோன்மணி சண்முகதாஸ்), தாமோதரம்பிள்ளை (க.கணபதிப்பிள்ளை), பதிப்புப் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை (பொ.பூலோகசிங்கம்), சி.வை.தாமோதரம்பிள்ளை 1822-1901 (இரா.வை.கனகரத்தினம்), ஏழ்தலப் புகழூர் சி.வை.தாமோதரம்பிள்ளை (தமிழ்ச்செல்வி சண்முகானந்தம்), வரலாறு கூறும் சைவசமயத்தின் பங்கு (தேவஸ்தான சபை), கல்வி வளர்ச்சியில் தாமோதரனாரும் இராஜ ஐயனாரும் (முருகேசு கௌரிகாந்தன்), ஏழாலை தந்த சைவத் தமிழ்ப் பெரியார் (சிவமகாலிங்கம்) ஆகிய 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24943). 

ஏனைய பதிவுகள்

assistir casino royale online

Plataforma de cassino on-line Máquinas caça-níqueis de cassino on-line Assistir casino royale online Lembre-se sempre de definir limites para suas apostas e estar ciente dos