13929 கம்பதாசன் வாழ்வும் பணியும்.

சிலோன் விஜயேந்திரன் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிவாசகர் நூலகம், 5, சிங்காரவேலு தெரு, தி.நகர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (சென்னை 600 021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்).

160 பக்கம், தகடுகள், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ.

தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் திண்டிவனம் பகுதியில் உள்ள உலகாபுரம் கிராமத்தில் பிறந்த அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் கம்பதாசன் (15.9.1916-23.5.1973) என்ற பெருங் கவிஞனை தமிழகமே மறந்துவிட்ட நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது மகத்தான கவித்திறனையும் காவியப் புலமையையும் முதன்முதலாக முழுமையாக அடையாளப்படுத்திய பெருமை ஈழத்தவரான கவிஞர் சிலோன் விஜயேந்திரனுக்கேயுரியது. சிலோன் விஜயேந்திரனால் ‘கவிஞர் கம்பதாசன்: வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் (நூல்தேட்டம் பதிவிலக்கம் 9915) இந்நூல் முன்னதாக 1986இல் சென்னை அல்லயன்ஸ் கம்பெனியினரால் வெளியிடப்பட்டிருந்தது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31284).

ஏனைய பதிவுகள்

8081 மனம் வெளுக்க: உள சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்.

வி.பி.தனேந்திரா (புனைப்பெயர்: யாழ். ராதவல்லி). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி). X, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

Retirer Ce Pourboire Mystake

Ravi Leurs Variantes Davantage Réputés De Jeu Pour Blackjack Un peu Sur Salle de jeu Gaulois Arêtes Des crédits, Coût De la pièce , !

15088 வெசக் சிரிசர 2009.

நெவில் பியதிகம (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள்; பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே