A.M.அபூபக்கர். கல்முனை: இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம், 62 ஒஸ்மான் வீதி, சாய்ந்தமருது-5, 3வது திருத்திய பதிப்பு, டிசம்பர் 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977, 2வது பதிப்பு, ஜுன் 1982. (கல்முனை: An-Noor Graphics Offset).
vi, 234 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-96577-0-4.
நூலாசிரியர் எழுதிவரும் இஸ்லாமிய வரலாறு என்ற நூல்தொடரில் உள்ள முதலாம் பாகத்தின் முதலாம் பகுதி இதுவாகும். அறபு நாடும் அறேபியரும் என்ற முதலாம் பிரிவின்கீழ் நிலமும் மக்களும், அறபு மக்கள், புவியியற் செல்வாக்கு, சர்வதேசத் தொடர்புகள் ஆகிய விடயங்களும்;, அறியாமைக்கால அறேபியா என்ற இரண்டாம் பிரிவின்கீழ்; சமய நிலை, சமூக நிலை, பொருளாதார நிலை, கலாசார நிலை, அரசியல் நிலை ஆகிய விடயங்களும், நபி முஹம்மதும் இஸ்லாத்தின் தோற்றமும் என்ற மூன்றாவது பிரிவின்கீழ், தியானமும் வேத வெளிப்பாடும், மதீனாவுக்கு ஹிஜ்ரத், மதீனா வெற்றி, போர்கள், பிரியாவிடை ஹஜ், பிணியும் மரணமும், ஒரு மதிப்பீடு, தேசப்படங்கள் ஆகிய விடயங்களும் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18345).